அந்தரத்தில் பறக்கும் கொடி (Antharathil Parakkum Kodi)
இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆளுமைகளுடனான அனுபவ பதிவுகள், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள் என சுந்தர ராமசாமியின் உரைநடை எழுத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுப்பு இது. தமிழ்ச் சமூகம் மற்றும் இலக்கியச் சூழல் குறித்த ஆழ்ந்த, கரிசனமிக்க விமர்சனங்கள் லாவகமான மொழியில் உரத்து வெளிப்படும் இக்கட்டுரைகள் தமிழ் இலக்கியச் சூழலில் சு.ராவைத் தனித்து இனங்காட்டுகின்றன. ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலத் தொடர்ச்சிகொண்ட அவரது கருத்துகளில் வெளிப்படும் நேர்மையும் பிடிப்பும் அவரோடு கருத்தியல் ரீதியாக உடன்பாடு கொள்ளாதவர்களால்கூட மறுதலிக்க இயலாதவை. சீரிய வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது. A collection of Sundara Ramaswamy’s literary criticism, memoirs and polemics. These articles forcefully criticize the Tamil society and its literary milieu. Even those who are oppossed to views can hardly deny that his consistent crituques on Tamil society for nearly half century show conceptual grip and a piercing insight. This collection is a must read for all serious readers.