குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (Kuzhantaikal Penkal Aankal)
"சுந்தர ராமசாமி தமது அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்வில் மூன்று நாவல்களைப் படைத்துள்ளார். அவை மூன்றும் அதனதன் வழியில் முக்கியமானவை; பொருள்சார்ந்து தனித்துவமானவை. ‘ஒரு புளியமரத்தின் கதை’ ஓர் இடத்தின் கதை. ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ காலத்தின் மீதான விமர்சனம். ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ மனித உறவுகளின் மாண்பை வியக்கும் படைப்பு. இந்தத் தனித்துவமே இந்நாவல்களைக் காலத்தை விஞ்சிய ஆக்கங்களாக நிலைநிறுத்துகிறது. • சு.ராவின் நாவல்களில் அபூர்வமான எளிமையும் இயல்பான அழகும் மிளிரும் நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’. லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்நாவலின் ஆங்கில ஆக்கம் 2014ஆம் ஆண்டுக்கான கிராஸ்வேர்டு பரிசைப் பெற்றது. This novel describes the life of a Tamil brahmin family in northern Travancore. Considered to be one of the best works of Su.Raa, the accalimed Tamil writer-poet."